தமிழக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஷாக்., பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பே இல்லை! அமைச்சர் திட்டவட்டம்!!

0
தமிழக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஷாக்., பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பே இல்லை! அமைச்சர் திட்டவட்டம்!!
தமிழக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஷாக்., பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பே இல்லை! அமைச்சர் திட்டவட்டம்!!
தமிழகத்தில் ஒப்பந்த புள்ளியாக பணியாற்றி வந்த செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய சொல்லி போராடுவதில் எந்த நியாயமும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பேட்டி:

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில், ஒப்பந்த புள்ளியாக 2300 தற்காலிக செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளுடன் நிறைவடைந்த நிலையில், சமீப காலமாக தங்களை  பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என போராடி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர்கள் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்றும், அரசின் குறிப்பிட்ட மருத்துவத் துறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் முதல்வர் உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால், தங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் எனவும், ஒப்பந்த அடிப்படையிலான பணி வேண்டாம் என்றும் போராடி வருகின்றனர்.
இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், கடந்த ஆட்சியில் அரசின் எந்தவித  வழிமுறைகளும் இல்லாமல் பணியமர்த்தப்பட்ட இந்த செவிலியர்கள், பணி நிரந்தரம் கோருவது நியாயம் இல்லை என தெரிவித்துள்ளார். அவர்களின் நியமனத்தில் எந்த இட ஒதுக்கீடும், சான்றிதழ் சரிபார்ப்பும் செய்யப்படவில்லை என்பதால்  இவர்கள் சட்டப்படி பணி நிரந்தரம் கோர முடியாது என்றும் தெளிவு படுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here