தற்காலிக செவிலியர்கள் விஷயத்தில் அரசு எடுத்த திடீர் நடவடிக்கை.,முக்கிய அரசாணை வெளியீடு!!

0
தற்காலிக செவிலியர்கள் விஷயத்தில் அரசு எடுத்த திடீர் நடவடிக்கை.,முக்கிய அரசாணை வெளியீடு!!
தற்காலிக செவிலியர்கள் விஷயத்தில் அரசு எடுத்த திடீர் நடவடிக்கை.,முக்கிய அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் போராடி வரும் தற்காலிக செவிலியர்களுக்கு, மீண்டும் பணி வழங்குவது குறித்த முக்கிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசாணை வெளியீடு:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், 2300 க்கும் மேற்பட்ட தற்காலிக செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்ததால், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அவர்கள் போராடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், போராட்டம் நடத்தி வரும் தற்காலிக செவிலியர்களின் பிரதிநிதிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், போராடி வரும் 2,300 தற்காலிக செவிலியர்களை அவர்களின் சொந்த ஊரிலேயே பணியமர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

“ஆசிரியர்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது” – ஓ.பன்னீர் செல்வம் கொந்தளிப்பு!!!

நீதிமன்ற உத்தரவின்படி இட ஒதுக்கீட்டின் பேரிலேயே யாரையும் பணி நிரந்தரம் செய்ய முடியும் எனவும், அரசு இதில் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்பதை செவிலியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here