தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சுற்றறிக்கை அனுப்பி கல்வித்துறை உத்தரவு!!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - சுற்றறிக்கை அனுப்பி கல்வித்துறை உத்தரவு!!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - சுற்றறிக்கை அனுப்பி கல்வித்துறை உத்தரவு!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆரம்பிக்க உள்ள 2ம் பருவம் குறித்த பயிற்சி வழங்கும் சிறப்பு வகுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கல்வித்துறை வெளியீடு :

தமிழகத்தில், அடுத்த வார இறுதியில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இதை அடுத்து, மாணவர்களுக்கு இந்த பருவத்திற்கு உரிய பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும் என்ற, முனைப்புடன் ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது இந்த தேர்வு முடிந்ததும், மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டு மீண்டும் இரண்டாம் பருவம் தொடங்க உள்ளது. இதையடுத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2ம் பருவத்திற்கான, எண்ணும் எழுத்தும் பயிற்சி குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்கும் இந்த பயிற்சி வருகிற அக்டோபர் 6 முதல் 8ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என்றும், இந்த பயிற்சி வகுப்பில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் உட்பட தலைமை ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்த முக்கிய சுற்றறிக்கை ஒன்றை SCERT இயக்குனர் அனைத்து தொடக்கப்பள்ளி, ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here