தமிழக மாணவர்களின் இந்த நிலைமைக்கு எப்போ தான் முடிவு? பொது மக்கள் மத்தியில் வலுக்கும் கோரிக்கை!!

0
college students
தமிழக மாணவர்களின் இந்த நிலைமைக்கு எப்போ தான் முடிவு? பொது மக்கள் மத்தியில் வலுக்கும் கோரிக்கை!!

தமிழகத்தில் பேருந்து ஏணியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்த, காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, இதற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

வலுக்கும் கோரிக்கை:

தமிழகத்தில்  பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்யக் கூடாது என  அரசு வலியுறுத்தி உள்ளது. படிக்கட்டு பயணத்தின் ஆபத்தை, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமும் அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், சமீப காலமாக, படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களின் செயல் எல்லை மீற ஆரம்பித்துவிட்டது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிலையில் ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சிலை மார்க்கமாக, செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்கள் பஸ் படிக்கட்டையும் தாண்டி, பேருந்து ஏணிகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இது குறித்த, புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள், கண்டிப்பாக அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், மாணவர்களின் படிக்கட்டு மரணத்திற்கு எண்ட் கார்டு போட வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here