நாட்டிலேயே முதல் முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டம் – தமிழக முதல்வர் இன்று தொடக்கம்!!

0

தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உள்ளார்.

கொரோனா நோயில் இருந்து மக்களை காக்கும் கடவுளாக செயல்படுவது கொரோனா தடுப்பூசி. முதலில் தடுப்பூசியின் பயனை உணராத மக்கள் பின்பு அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டனர். இந்த கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மையங்களில் இலவசமாகவே போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று தொடங்கப்பட்டது. பெரிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி எனப்படும் CSR நிதியைக் கொண்டு தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டமாக சென்னை காவேரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட உள்ளது. அதேசமயம், தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையின் கீழ், தடுப்பூசி போடும் தற்போதைய நடைமுறையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here