தமிழக அரசானது, விழாக்காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஏற்படும் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு பேருந்து வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதன்படி, நாளை (செப்டம்பர் 15) வெள்ளிக்கிழமை முதல் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலர் தங்களது சொந்த ஊர் செல்ல விரும்புவர். இவர்களுக்காகவே, தமிழக விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை கூடுதலாக 650 பேருந்துகளும், சனிக்கிழமை 200 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மேலும், மதுரை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து 400 பேருந்துகள் என 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதே போல, திங்கள் கிழமை சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் செல்ல விரும்பும் பயணிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.