தமிழக மக்களே உஷார் – மொபைல் SMS வாயிலாக நடக்கும் நூதன திருட்டு! போலீசார் எச்சரிக்கை!!

0
தமிழக மக்களே உஷார் - மொபைல் SMS வாயிலாக நடக்கும் நூதன திருட்டு! போலீசார் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, மின் கட்டணம் தொடர்பான SMS வாயிலாக புதுவித மோசடி ஒன்று நடைபெற்று வருவதாக காவல்துறையினர், பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

காவல்துறை எச்சரிக்கை:

தமிழகத்தில், பெரும்பாலான மக்கள் பணப் பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் முறைகளையே  பயன்படுத்துகின்றனர். ஆனால், இதில் எந்த அளவுக்கு நன்மை இருக்கிறதோ அதே அளவுக்கு, தொடர்ந்து மோசடிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது, புது வித மோசடி ஒன்று  நடைபெற்று வருவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்களின் மொபைல் எண்ணிற்கு, குறுந்தகவல் வாயிலாக மின் துண்டிப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வருகிறது. நீங்கள் மின் கட்டணம் அப்டேட் செய்யவில்லை என்றால், உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அதை தடுப்பதற்கு கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும் என அனுப்பப்படுகிறது.

ஆனால், அதை கிளிக் செய்த சில நிமிடங்களிலேயே, மொபைல் போனில் இருக்கும் அனைத்து தகவல்களும் ஹேக்கர்கள் கைக்கு செல்கிறது. இதன் மூலம், பண மோசடி நடப்பதாக ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த காவல்துறை, தெரியாத நம்பர்களில் இருந்து வரும் SMS களை புறக்கணிக்க வேண்டும் என்றும், இது குறித்த விழிப்புணர்வை தங்கள் வீடுகளில் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here