தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.,40,000 பேருக்கு Job கன்பார்ம் – மாவட்ட நிர்வாகம் உறுதி !!

0
தமிழக வேலைவாய்ப்பு தமிழருக்கே வேண்டும்.,சட்டப்பேரவையில் புதிய சட்டம்? அரசுக்கு கோரிக்கை!!
தமிழக வேலைவாய்ப்பு தமிழருக்கே வேண்டும்.,சட்டப்பேரவையில் புதிய சட்டம்? அரசுக்கு கோரிக்கை!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களின், பிரச்சனையை நீக்க வரும் நவ.26ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் சேலத்தில் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

நாளுக்கு நாள் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதை தவிர்ப்பதற்காக மாவட்ட அளவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ம் தேதி சேலத்தில் நடத்தப்பட்ட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த முகாமில் ஐடி, காப்பீடு, ஜவுளி, மற்றும் கட்டுமானம் போன்ற 300க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்களின் 40,000 காலிப்பணியிடங்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. ஆதலால் 8ம் வகுப்பு முதல் டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் மற்றும் டீச்சிங் என அனைத்து கல்வி தகுதியுடைவர்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

கோலாகலமாக தொடங்கிய கலைத்திருவிழா.., போட்டியில் ஆர்வம் காட்டும் அரசு பள்ளி மாணவர்கள்!!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க தங்களது சுயவிவரத்தை tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறும் இதற்காக எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தனியார் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதால் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை குறைந்து வருவதாக சமூக ஆர்வலர்களை கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here