தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் சாராரியாக காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் இயங்கி வருகிறது. இதில், குறிப்பாக அரசு பள்ளிகளானது காலை 9 மணி முதல் 4 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளி இயங்கும் நேரத்தை மாற்றியமைப்பது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, அரசு பள்ளிகளில் தொடக்க கல்வி மாணவர்களுக்கு காலை உணவு திட்டமானது, காலை 8:15 முதல் 8:50 மணிக்குள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி இயக்கும் நேரத்தை, காலை 8 மணி முதல் மாலை 3 வரை மாற்றியமைத்தால், காலை உணவை முடித்து மாணவர்கள் கல்வி கற்க வசதியாக இருக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.