தமிழக அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களே…, இந்த மாதம் வரை தான் சம்பளம் வழங்கப்படும்…, கல்வித்துறை உத்தரவு!!

0
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை TET தேர்வின் தேர்ச்சி அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால், பணி நியமனத்திற்காகவும் போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளதால், அரசு பள்ளிகளில் பல்லாயிரக் கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.
இதனால், தற்காலிகமாக பட்டதாரி மற்றும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களை மாதம் 15 ஆயிரம் என்ற அடிப்படையில் சம்பளத்திற்கு அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டனர். 2023-2024 ஆம் கல்வி ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட 1581 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 3585 இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மார்ச் 31ஆம் தேதி வரை சம்பளம் வழங்க அனுமதித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here