தமிழக பள்ளி தற்காலிக ஆசிரியர்கள் கவனத்திற்கு…, சம்பளம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
தமிழக பள்ளி தற்காலிக ஆசிரியர்கள் கவனத்திற்கு..., சம்பளம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!
தமிழக பள்ளி தற்காலிக ஆசிரியர்கள் கவனத்திற்கு..., சம்பளம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக TNTET தகுதித் தேர்வுகளை, ஆசிரியர் தேர்வாணையமானது நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் TNTET தேர்வுகள் நடந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் இதற்கான முடிவுகள் வெளியாகின. இதுவரை கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த TNTET தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றோருக்கு இன்றளவும் பணி வழங்கப்படவில்லை.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர்களுக்கு, போட்டி தேர்வு நடத்தப்பட்டு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்படும் என அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. ஆனால், போட்டி தேர்வுகளின்றி TNTET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இது ஒரு புறம் இருக்க, அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பப்பட்டன.

பொறியியல், அறிவியல் படங்கள் இனி தமிழில் கற்பிக்கப்படும்?? ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி உரை!!

இவர்களுக்கு மாதம் 15 ஆயிரம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இவர்களுக்கு ஒரு மாதத்திற்கான சம்பளம் எப்போதும் தாமதமாகவே வழங்கப்பட்டு வரப்படுகிறது. மேலும், ஒரு சில மாவட்டங்களில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான சம்பளமே வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் விரைவில் திறக்கப்பட உள்ளதால் சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here