தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.,,கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

0
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.,,கல்வித்துறை அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.,,கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கால தாமதம் இல்லாமல் சம்பளம் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிரடி உத்தரவு:

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் ஊதியம் கிடைக்காததால் ஆசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது குறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது, சில நிர்வாக காரணங்களால் கடந்த மாதம் மட்டும் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தமிழகத்தில் வீரியம் எடுக்கும் “மெட்ராஸ் ஐ”.., அரசாங்கம் வெளியிட்ட அதிரடி முடிவு!!

இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கால தாமதம் எதுவும் இல்லாமல் சம்பளம் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் சம்பளம் பெறாத ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் சம்பள பட்டியலை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில் சம்பள பட்டியலை, அலுவலகத்தில் சமர்ப்பித்து உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவின் வாயிலாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் சம்பளம் கிடைத்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here