தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கிடையாதா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கிடையாதா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
தமிழகத்தில் இப்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இறுதி தேர்வுகள் நெருங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ள சூழ்நிலையில் ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒன்று முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 5 ம் தேதியுடன் ஆண்டு தேர்வுகள் முடிவடைய உள்ளது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு வரும் 10, 12 ஆம் தேதி தேர்வுகள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 22, 23ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
அதனால் அதுவரை பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தேர்தல் வேறு வர உள்ளதால் தேர்தல் பணிக்காகவும் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். எனவே அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை பணி நாளாகவே கருதப்படும் என குறிப்பிட்டுள்ளனர். அதன் பிறகு கோடை விடுமுறை அளிக்கலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here