தமிழக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
தமிழக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
தமிழக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் பொது தேர்வு எழுத உள்ள 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவாரியான தேதியுடன் கூடிய பொதுத்தேர்வு அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

வெளியான அட்டவணை:

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி தமிழ், 15 ஆம் தேதி ஆங்கிலம், 17 ஆம் தேதி கணினி அறிவியல், 21 ஆம் தேதி இயற்பியல் மற்றும் பொருளாதாரம், 27 ஆம் தேதி கணிதம் விலங்கியல் மற்றும் வணிகவியல், 31ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு மற்றும் வணிக கணிதம், ஏப்ரல் 03 ம் தேதி வேதியல், கணக்கியல் மற்றும் புவியியல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதைத்தொடர்ந்து, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி தமிழ், 16ஆம் தேதி ஆங்கிலம், 20 ஆம் தேதி இயற்பியல் மற்றும் பொருளாதாரம், 24 ஆம் தேதி உயிரியல், தாவரவியல் மற்றும் வரலாறு, 28ஆம் தேதி வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல், 30 ஆம் தேதி கணினி அறிவியல், ஏப்ரல் 5ம் தேதி கணிதம், விலங்கியல் மற்றும் வணிகவியல் தேர்வு நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பான் கார்டு தாரர்கள் கவனத்திற்கு., உங்களுக்கு கடைசி சான்ஸ்! இல்லைன்னா, எல்லாம் குளோஸ்!!

இதைத்தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தமிழ், 10 ஆம் தேதி ஆங்கிலம், 13ம் தேதி கணிதம், 17 ஆம் தேதி அறிவியல் மற்றும் 20ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here