பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களே கவனம்., வரும் பிப்.4 க்குள் இதை கட்டாயம் முடிக்கணும்!!

0
பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களே கவனம்., வரும் பிப்.4 க்குள் இதை கட்டாயம் முடிக்கணும்!!

பொதுத்தேர்வு எழுதும் தமிழக தனியார் பள்ளி மாணவர்கள், தங்களுக்கான தேர்வு கட்டணத்தை வருகிற பிப்ரவரி 4ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

வெளியான அறிவிப்பு:

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அந்த வகையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் மாதம் பிப்ரவரி முதல் தொடங்க உள்ளது. இதற்காக மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் விநியோகிக்கும் பணிகள் கடந்து சில நாட்களுக்கு முன்பே அரசு தேர்வுகள் இயக்ககத்தால் தொடங்கப்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரம் தனியார் பள்ளி மாணவர்கள் இந்த தேர்வு கட்டணத்தை தங்கள் பள்ளி வாயிலாக செலுத்த வேண்டும்.

வாட்ஸ் அப்பில் பழைய மெசேஜை எடுக்க சிரமமா இருக்கா? வந்தாச்சு புது அப்டேட்! மெட்டா கொடுத்த சர்ப்ரைஸ்!!

இதற்கான காலக்கெடு ஜனவரி 20 ஆம் தேதியுடன் நிறைவடை இருந்த நிலையில் தற்போது, இதற்கான அவகாசம் பிப்ரவரி 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாணவர்கள் தேர்வு கட்டணத்தை விரைந்து செலுத்த வேண்டும் என தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here