தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டம் – நேரடி கண்காணிப்பில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்!!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டம் - நேரடி கண்காணிப்பில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த, பள்ளி மாணவர்களுக்கான அதிரடி திட்டம் ஒன்றை தொடர்ந்து கண்காணிப்பதற்காக, அரசின் சார்பாக புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய செயலி:

தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், தொடர்ந்து தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்து, முறையாகக் கண்காணிக்க மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

சி.எம் 13 எஃப்.எஸ் என்ற இந்த செயலி வாயிலாக உணவு சமைக்க தொடங்கும் நேரம், முடியும் நேரம், வாகனத்தில் பள்ளிக்கு கொண்டு வரும் நேரம், குழந்தைகளுக்கு பரிமாறும் நேரம் உள்ளிட்ட அனைத்து அப்டேட்டுகளும் பதிவு செய்யப்பட உள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த ஆப் வாயிலாக, முதலமைச்சர் நேரடியாக இந்த திட்டத்தை கண்காணிக்க உள்ளார். இந்தத் திட்டத்தில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here