தமிழக பள்ளிகளில் காலாண்டு விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது – கல்வித்துறை திட்டவட்ட அறிவிப்பு!!

0
தமிழக பள்ளிகளில் காலாண்டு விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது - கல்வித்துறை திட்டவட்ட அறிவிப்பு!!
தமிழக பள்ளிகளில் காலாண்டு விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது - கல்வித்துறை திட்டவட்ட அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நாட்களில் அவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என கல்வித்துறை அறிவித்துள்ளது.

கல்வித் துறை அறிவிப்பு:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கானகாலாண்டு தேர்வு நடத்தப்பட்டு, கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை குறித்த, முக்கிய அறிவிப்புகள் பள்ளிக்கல்வித்துறை வாயிலாக ஏற்கனவே சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு காரணமாக மாணவர்களுக்கான விடுமுறை நீட்டிக்கப்பட்டு, அது குறித்து அறிவிப்பு அண்மையில் வெளியானது. குழந்தைகளுக்கு H1N1 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. ஆனால் தற்போது இதற்கான தேவை இல்லை என மாநில அரசு விளக்கம் அளித்தது.
தற்போது மாணவர்கள் காலாண்டு விடுமுறையில் இருந்து வருகின்றனர். இந்த விடுமுறை நாட்களில் அவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை, நிச்சயம் நடத்தக்கூடாது எனக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, கல்வித்துறை வாயிலாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுபவப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here