தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை? கல்வித்துறை திட்டவட்ட முடிவு!!

0
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!!
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழக்கமாக விடப்படும் பொது விடுமுறைகளும் இனி இருக்குமோ? என்ற புதிய அச்சம் மாணவர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

கல்வித்துறை முடிவு:

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின், கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு, இன்னும் சில வாரங்களில் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

காலாண்டு தேர்வு 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 26 முதல் 30ம் தேதி வரையும், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 23 முதல் 30ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. வழக்கமாக தேர்வு முடிந்ததும் 10 நாட்கள் வரை விடுமுறை விடப்படும். ஆனால் இந்த முறை சரஸ்வதி பூஜை காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விடுமுறையோடு மொத்தம் 5 நாட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அதிகாரிகள், 2 ஆண்டுகளாக பள்ளி செயல்படாமல் இருந்ததால் நடப்பு காலாண்டு விடுமுறை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த அறிவிப்பால் இனி வரும் வழக்கமான விடுமுறைகளும் தங்களுக்கு கிடைக்குமா? என்ற அச்சத்தில் மாணவர்கள் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here