தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் இன்று (நவம்பர் 4) கனமழை காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, மயிலாடுதுறை மற்றும் சென்னை ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
அரசு ஊழியர்களே ரெடியா இருங்க…, தீபாவளிக்கு முன் வெளியாக இருக்கும் மாஸ் அப்டேட்!!