தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் “இலவச சைக்கிள்” வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு செயல்பட்டு வரும் இத்திட்டத்தின் மூலம் வருகை பதிவு அதிகரித்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இவ்விழாவில் மாநில சுற்றுச்சூழல் அணித்தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 138 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.