தமிழக பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை – தொடரும் உயிரிழப்பையடுத்து மாநில காவல் துறை அதிரடி!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை - தொடரும் உயிரிழப்பையடுத்து மாநில காவல் துறை அதிரடி!!

தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை தடுக்க தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

படிக்கட்டு பயணம்:

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின் பள்ளிகள் கடந்த ஆண்டு முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை சரி செய்ய கவுன்சிலிங் வகுப்புகள் தொடர்ந்து அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பள்ளிகளுக்கு பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் படிகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இந்த படிக்கட்டு பயணத்தால் நேற்று மதுரையில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தொடர்ந்து இன்று செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பகுதியில் உள்ள 19 தடம் எண் கொண்ட பேருந்தில்  மாணவன் நிவேதன், நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைப் பார்த்த பொதுமக்கள், இதற்காக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மாணவர்களின் இந்த செயலை கண்டிக்க, போலீசார் முழுமூச்சாக இறங்கி உள்ளனர். படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை, இறக்கிவிட்டு அவர்களை கண்டிக்கும் செயலை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து, படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் மாணவர் இழப்பு முடிவுக்கு வரும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here