தமிழக பள்ளிகளுக்கு ஜூன் 14 வரை விடுமுறை நீடிப்பு.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
தமிழகத்தில் மீண்டும் தள்ளிப் போகும் பள்ளி திறப்பு?? முதல்வருடன் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை!!
தமிழகத்தில் மீண்டும் தள்ளிப் போகும் பள்ளி திறப்பு?? முதல்வருடன் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை!!

கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜூன் 1 மற்றும் 5 ம் தேதிகளில் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என முன்பு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். ஆனால், கோடை வெயிலின் தாக்கத்தை பொறுத்து புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்குவதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் உடன் கூறியிருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன்படியே, மே மாத இறுதியில் கோடை வெயிலின் தாக்கம் மற்றும் மாணவர்களின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜூன் 7ம் தேதி அனைத்து மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் தொடங்கும் என அறிவித்தார். இந்நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் கோடை வெயிலின் தாக்கத்தால் மீண்டும் பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழக அரசுப்பள்ளியில் இதற்கு இதுதான் நெறிமுறை.., கல்வித்துறை எச்சரிக்கை!!!

இதனால், மீண்டும் புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்வி அதிக அளவில் எழுந்து வருகிறது. இது தொடர்பாக, இன்று கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, இன்று நடைபெற்ற ஆலோசனையின் முடிவில் ஜூன் 12ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், ஜூன் 14ம் தேதி 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என அன்பில் மகேஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here