தமிழகத்தில் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு?? – பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் அளித்த முக்கிய தகவல்!!

0

8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து 8 ஆம் தேதிக்கு பின்னர் முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் 1 முதல் திறக்கப்பட்டன. அதற்கான கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளும் அரசால் வெளியிடப்பட்டு ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்படடுள்ளன. இதற்கான கொரோனா தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடகா மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

தற்போது தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில் ஒரு வார நிலவரத்தை தெரிந்த பின், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து, 8ந் தேதிக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here