தமிழக அரசானது, அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வியில் சேருவதை ஊக்குவிக்கும் நோக்கில், பல்வேறு நலத்திட்ட நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள், 1000 மாணவர்களை தேர்வு செய்து இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் என முதல்வரின் திறனறிவு தேர்வில் முன்னிலை பெறும் 1000 மாணவர்களை தேர்வு செய்து வழங்க திட்டமிட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இத்திட்டத்தின் படி, பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்த திறனறிவு தேர்வு வரும் செப்டம்பர் 23ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இதற்கிடையில் தான், காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதால் மாணவர்கள் திறனறிவு தேர்வுக்கு எவ்வாறு தயாராகுவது என்ற குழப்பத்தில் உள்ளனர். இதில் குறிப்பாக, திறனறிவு தேர்வுக்கு முந்தைய நாள் வேதியியல் தேர்வு நடைபெற உள்ளது. இதனால், திறனறிவு தேர்வை மாற்றி அமைக்கலாமா என கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெட்ரோ பயணிகளே…, மேலும் 3 பகுதிகளில் ரயில் சேவை நீட்டிப்பு?? நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!