தமிழக பள்ளி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் – காலாண்டு விடுமுறை மேலும் நீட்டிப்பு! கல்வித்துறை உத்தரவு!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் - காலாண்டு விடுமுறை மேலும் நீட்டிப்பு! கல்வித்துறை உத்தரவு!!

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலாண்டு விடுமுறை மேலும் நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

விடுமுறை நீட்டிப்பு :

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கான அட்டவணையும், விடுமுறை குறித்த அறிவிப்பும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெளியானது. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்.9 வரையும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்.5ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில், ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசு நேற்று அறிவித்தது.

தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டண உயர்வு.,, அமைச்சர் சிவசங்கர் அறிவுரை!!

இதனைத் தொடர்ந்து தற்போது, 6 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை அக். 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here