தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை ஜூன் 15 வரை நீடிப்பு?? இதுதான் அதிகாரபூர்வ தகவல்!!

0

தமிழக பள்ளிகளுக்கு இப்பொழுது கோடை விடுமுறை முடிவுக்கு வர இருக்கும் நிலையில், இன்னும் 2 நாளில் திறக்கப்படவுள்ளது. இதனால் மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இந்த தடவை நோட்டுகளின் விலையும் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது.  மேலும் அனைத்து பள்ளிகளிலும் சுத்தம் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழக பள்ளிகள் திறப்பு குறித்த வதந்திகள் வைரலாகி வருகிறது. அதாவது, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம்,தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஜூன் 15 ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கும் இதே தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படும் என்ற வதந்திகள் பரவி வருகிறது.

ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி பள்ளிகள் ஜூன் 7 ஆம் தேதியில் திறக்கப்படும். அதே சமயத்தில் அதற்கான அனைத்து வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டுள்ளது. அனால் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக பள்ளிகள் திறப்பில் மாற்றம் ஏற்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here