தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – விரைந்து முடிவெடுக்க அரசுக்கு கோரிக்கை!!

0
தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை - விரைந்து முடிவெடுக்க அரசுக்கு கோரிக்கை!!

தமிழகத்தில் குழந்தைகளுக்கு இன்புளுயன்சா என்ற பன்றி காய்ச்சல், பரவி வருவதால் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த வார இறுதியில் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு முடிந்ததும், ஒரு வாரம் வரை விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் அடுத்த பருவம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக H1N1 என்ற வகை பன்றி காய்ச்சல் குழந்தைகளிடையே மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

மாநிலத்தில் இதுவரை 280 க்கும் மேற்பட்ட குழந்தைகள், பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக சுகாதாரத் துறை அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, நிலைமை எல்லை மீறிப் போய் விடாமல் தடுக்க, தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என, அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, வழக்கம் போல் பள்ளிகளை செயல்படுத்தலாம் என்றும், அதுவரை இது குறித்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here