இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு காசோலை…, முதன்மை அதிகாரி வழங்கல்!!

0
இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு காசோலை..., முதன்மை அதிகாரி வழங்கல்!!
இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு காசோலை..., முதன்மை அதிகாரி வழங்கல்!!

கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகமாக இருந்த காலத்தில், பொது முடக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இந்த காலகட்டத்தில், பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக அரசு சில ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வந்தது. அதாவது, ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடு செய்வதற்காக இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த திட்டத்திற்கு, கற்பித்தல் சேவையை மேற்கொள்ள தன்னார்வலர்களையும் அரசு அழைத்து இருந்தது. இதன் மூலம், பள்ளி நேரம் முடிந்த பிறகு மாலை நேரங்களில் இந்த இல்லம் தேடிக் கல்வி சிறப்பாக நடைபெற்று வந்தது. இன்று வரையிலும், இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், உள்ள தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்டந்தோறும் சில போட்டிகளை கல்வி சார்பில் நடத்தப்பட்டது.

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்.., அரையிறுதிக்கு முன்னேறிய PV.சிந்து.., மற்றொரு ஆட்டத்தில் வீழ்ந்த ஸ்ரீகாந்த்!!!

இந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி மற்றும் உயர்நிலை தொடக்க தன்னார்வலர்களுக்கு குறும்பட போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த தன்னார்வலர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வித்துறை அதிகாரி மகேஸ்வரி ரூ.2000 காசோலை மற்றும் சான்றிதழ்களை பரிசாக வழங்கி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here