
தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்குகிறது. இதில், குறிப்பாக நேற்று (நவம்பர் 8) இரவு முதல் விடிய விடிய மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், இந்த 6 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் இன்று (நவம்பர் 9) விடுமுறை என அறிவித்தது.

தீபாவளிக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இந்த கனமழை தொடர்ந்து பெய்யுமேயானால் மேலே குறிப்பிட்டுள்ள 6 மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 10) விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், இந்த மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு இன்று (நவம்பர் 9), நவம்பர் 10, 11 (சனிக்கிழமை), 12 (தீபாவளி) மற்றும் நவம்பர் 13 (திங்கள் கிழமை) என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.