
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு நேற்று (செப்டம்பர் 15) முதல் தொடங்கி உள்ளது. இந்த தேர்வு வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெற்று, செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது “காலாண்டு தேர்வு விடுமுறை 5 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால், அதற்குள் மாணவர்களின் விடைத்தாளை மதிப்பீடு செய்து எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்வது மிகவும் சிரமம். எனவே வழக்கம்போல் 7 நாட்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை வழங்க வேண்டும்.” என பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.