தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கற்றல் கற்பித்தல் திட்டம் அனைத்து பள்ளிகளிலும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களின் செயல்பாடு பற்றி வருடாந்திர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ஆய்வு சரியாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் முடித்து டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.