தமிழகத்தில் இந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!!

0
தமிழகத்தில் இந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வுகள் அடுத்த மாதம் முதல் துவங்க உள்ளது. இந்த பொது தேர்வை முன்னிட்டு பள்ளி ஆசிரியர்களுக்கு பல அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு தேர்வு துறை பள்ளி கல்வித்துறைக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடிகள் நடந்துள்ளதாக புகார் வந்தது.
இதை அடுத்த விசாரணை மேற்கொண்டதில் 1000 ஆசிரியர்கள் தேர்வு தாள் திருத்தும் போது கவன குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. தற்போது இந்த ஆசிரியர்களை இந்த ஆண்டு தேர்வு கண்காணிப்பு, விடைத்தாள் மதிப்பீடு உள்ளிட்ட எந்த பணிகளுக்கும் ஈடுபடுத்தக் கூடாது என எச்சரித்துள்ளனர். மேலும் இந்த ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறைக்கு தேர்வு துறை பரிந்துரை செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here