
தமிழகத்தில் தகுதியான 1.06 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும், கலைஞர் மகளிர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 15) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை அண்ணா பிறந்த காஞ்சிபுரத்திலே முதல்வர் ஏற்பாடு செய்து திட்டத்தை துவக்கி வைத்தது தி.மு.க.வினர் உள்ளிட்ட பலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவுமே வாழ்த்தும் மகத்தான திட்டமாக “கலைஞர் மகளிர் திட்டம்” விளங்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் மகளிரின் மேன்மைக்காக செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், சரித்திரம் படைப்பது உறுதி எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூரில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு., பாதிக்கப்பட்டவர் பட்டியல் வெளியீடு!!!