
தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு, வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே தகுதியானவர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல் நிராகரிக்கப்பட்ட 56.5 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு, உரிய காரணங்களை அதிகாரிகள் தெரியப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தியவர்கள், சொந்தமாக நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், அரசு பணியாளர்கள், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் ஆகியோர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். இதில் எந்த காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதை சம்பந்தப்பட்டவர்களின் மொபைல் எண்ணுக்கு வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி இப்படியெல்லாம் செய்தியை அனுப்பலாம்? நியூ அப்டேட்!!!