தமிழக வியாபாரிகளுக்கு ஜாக்பாட் – இதுவரை இல்லாத புதிய திட்டம் அறிமுகம்! அமைச்சர் உறுதி!!

0
தமிழக வியாபாரிகளுக்கு ஜாக்பாட் - இதுவரை இல்லாத புதிய திட்டம் அறிமுகம்! அமைச்சர் உறுதி!!

தமிழகத்தில் உள்ள சாலையோர கடை வியாபாரிகளுக்காக, இதுவரை இல்லாத புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

அமைச்சர் உறுதி:

தமிழகத்தில் உள்ள, விடுபட்டவர்களுக்கு கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பை, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அண்மையில் அறிவித்தார். விரைவில், தமிழக ரேஷன் கடைகளில் Gpay எனப்படும் ஆன்லைன் பரிவர்த்தனை முறை, முதற்கட்டமாக 10 கடைகளில் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள சாலையோர கடை வியாபாரிகளுக்கு, முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சாலையோர கடைகளுக்கு, கூட்டுறவு துறை மூலம் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பரிசோதனைக்காக திருவல்லிக்கேணியில் ஒரு வாரத்திற்கு இந்த சிலிண்டர் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

ரயில் பயணிகளுக்கு சர்ப்ரைஸ் – மொத்தத்தையும் இனி வாட்ஸ் ஆப்லேயே பார்க்கலாம்! சூப்பர் திட்டம்!!

அந்த முடிவைப் பொறுத்து, சாலையோர கடை வியாபாரிகளுக்கு கூட்டுறவு சொசைட்டி மூலம் கேஸ் சிலிண்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்துள்ளார். இதனால் சாலையோர உணவுக் கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here