தமிழக மக்களுக்கு ஷாக்., ஊழியர்களின் திடீர் விடுப்பு போராட்டத்தால் ஸ்தம்பிக்கும் அன்றாட பணிகள்!!

0
தமிழக மக்களுக்கு ஷாக்., ஊழியர்களின் திடீர் விடுப்பு போராட்டத்தால் ஸ்தம்பிக்கும் அன்றாட பணிகள்!!
தமிழக மக்களுக்கு ஷாக்., ஊழியர்களின் திடீர் விடுப்பு போராட்டத்தால் ஸ்தம்பிக்கும் அன்றாட பணிகள்!!

நிறைவேற்றாத முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற மார்ச் 23ஆம் தேதி வருவாய் அலுவலர்கள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

விடுப்பு போராட்டம் :

தமிழக வருவாய்த் துறையில் பணிபுரியும், ஊழியர்கள் பலருக்கு முறையாக பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இது குறித்த, வருவாய் துறை அலுவலர்கள் சமீபத்தில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பிறகு பேசிய மாநில தலைவர் முருகையன், நான்காண்டுகளாக வருவாய்த் துறையில் காலியாக உள்ள துணை கலெக்டர் போன்ற உயர்மட்ட பதவிகளுக்கான பட்டியல் வெளியிடப்படவில்லை எனவும், பதவி உயர்வு பெற வேண்டிய பலர் ஓய்வு பெற்று விட்டதாகவும் வேதனை தெரிவித்தனர். இது போக, தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் போன்ற பதவி உயர்வு பெற வேண்டியவர், இந்த தாமதத்தால் பதவி இறக்கம் பெற்றுள்ளதாகவும்,கவலை தெரிவித்தனர்.

அரசின் இந்த துறை ஊழியர்களுக்கு அடிச்ச பம்பர் லாட்டரி., 10-20% வரை ஊதியத்தை உயர்த்த முடிவு!!

எனவே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 9ம் தேதி, மாலை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக அலுவலகப் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், மார்ச் 23 ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இதனால் அன்றைய தினம் வருவாய் துறை சார்ந்த பணிகள், முழுவதும் முடங்கும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here