நாடு முழுவதும் வரும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகைக்காக தமிழக அரசானது பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. அதாவது, தீபாவளிக்காக ரேஷன் பொருட்களை மக்கள் முன்கூட்டியே வாங்குவார்கள் என்பதால், இருப்பை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும், பொது மக்களின் நலனுக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யப்படும் எனவும் தமிழக அரசின் உணவுத் துறை அறிவித்துள்ளது. இதனால், ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தேவையான அளவு இருப்பை வைத்துக் கொள்ளுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.