தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு – அரசின் சஸ்பென்ஸ்! நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு!!

0
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு - அரசின் சஸ்பென்ஸ்! நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவசமாக வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கான முதல் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தயாரிப்புக்கான ஆர்டர் விடப்பட்டுள்ளது.

இலவச வேட்டி சேலை:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது அரசின் சார்பாக, இலவச வேட்டி சேலை, பொங்கல் தொகுப்பு பை மற்றும் உதவித்தொகை ஆகியவை கொடுக்கப்படுவது வழக்கம். கடந்தாண்டு பணப்பரிசு இல்லாமல், பொங்கல் தொகுப்பு பைகளுடன் சேர்த்து இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய இலவச வேட்டி, சேலைக்கான முதல் கட்ட தவணையாக ரூ. 243.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உற்பத்தி, அக்.1 முதல் தொடங்கி டிச.1 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு அடித்த ஜாக்பாட் – 20,000 காலிப்பணியிடங்கள்! அரசு அறிவிப்பு!!

விசை தறியில் இந்த பணிகளை முடிக்க ஈரோடு, கோவை, திருச்செங்கோடு, திருநெல்வேலி ஆகிய சரகங்களில் உள்ள தறி ஆலைகளுக்கு இதற்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை, 3 மாதங்களுக்குள் முடிப்பது சிரமம் என்பதால் அடுத்த ஆண்டாவது அதற்கான காலக்கெடுவை அரசு முன்னரே வழங்க வேண்டும்.

அதாவது ஜூன் முதல் ஜூலை மாதத்திற்குள் இதற்கான உற்பத்தி ஆணையை வழங்கினால், பணியை விரைந்து முடிக்க அவகாசம் கிடைக்கும் என கைத்தறி துணி ஆணையர் ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here