தமிழக ரேஷன் கார்டுதாரர்களே உஷார் – இன்னும் 2 நாள் மட்டும் தான் இருக்கு! இப்பவே ரெடி ஆகிகோங்க!!

0
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக் நியூஸ் - முக்கிய உணவு பொருள் விநியோகம் கட்! அரசு பகீர்!!
தமிழக ரேஷன் கார்டுதாரர்களே உஷார் - இன்னும் 2 நாள் மட்டும் தான் இருக்கு! இப்பவே ரெடி ஆகிகோங்க!!

தமிழக ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள், ஸ்மார்ட் கார்டுகளில் மேற்கொள்ள விரும்பும் திருத்தங்களுக்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மக்கள் குறைதீர்ப்பு முகாம்:

தமிழக ரேஷன் கார்டு தாரர்களுக்கு  பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கான, முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு திகழ்கிறது. இந்த ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகளை சரி செய்வதற்கான மக்கள் குறைதீர்ப்பு முகாம் மாதம் தோறும் ஒவ்வொரு வட்டத்திலும் நடத்தப்பட்டு வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதில், இந்த மாதத்துக்கான மாதாந்திர குறைதீர்ப்பு முகாம்  சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில், செப்டம்பர் 10ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த, முகாமில் கலந்து கொண்டு ஸ்மார்ட் கார்டில் திருத்தங்கள் செய்யவும், முதியவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் ரேஷன் பொருட்கள் பெறக்கூடிய அங்கீகார சான்று பெறவும், நுகர்வோர் குறைகள் பற்றி தெரிவிக்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் சொல்லப்படும் புகார்கள் அனைத்தும், உரிய காலத்தில் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என  அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள், இந்த முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here