ரேஷன் கடை நேர்முகத் தேர்வின் ரிசல்ட் எப்போ? 3 மாதமாகியும் இறுதிப்பட்டியல் வெளியாகாத சோகம்!!

0
ரேஷன் கடை நேர்முகத் தேர்வின் ரிசல்ட் எப்போ? 3 மாதமாகியும் இறுதிப்பட்டியல் வெளியாகாத சோகம்!!
ரேஷன் கடை நேர்முகத் தேர்வின் ரிசல்ட் எப்போ? 3 மாதமாகியும் இறுதிப்பட்டியல் வெளியாகாத சோகம்!!

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் நடந்த ரேஷன் கடை காலி பணியிட நேர்முகத் தேர்வுக்கான, இறுதிப்பட்டியல் இன்னும் வெளியாகாதது குறித்து தேர்வர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தேர்வர்கள் கவலை :

தமிழக கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் உள்ளிட்ட பதவிகளுக்கான 4000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை ஒரே கட்டமாக மாவட்ட வாரியாக நடத்தப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எழுத்து தேர்வு உள்ளிட்ட எதுவும் இல்லாததால் லட்சக்கணக்கான தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்திருந்தனர். தற்போது, இந்த நேர்முகத் தேர்வு நடந்து 3 மாதங்களாகியும் இதற்கான இறுதி பட்டியல் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

புலம்பெயர் தொழிலாளர்கள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி., தொழில்துறை அமைச்சர் திடீர் நடவடிக்கை!!

சமீபத்தில் கிராம உதவியாளர் பதவிக்கான, ரிசல்ட் அந்தந்த வட்டாட்சியர்களால் வெளியிடப்பட்டது. ஆனால், ரேஷன் கடை நேர்முகத் தேர்வில் இது சார்ந்த எந்த வெளிப்படைத்தனையும் இல்லாமல் இருப்பதால், தேர்வர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, குறிப்பிட்ட நேரத்திற்குள் நியாயமாக இந்த தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here