குடும்ப கார்டு வச்சுருக்கவங்க கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கணும் – இல்லைன்னா ரேஷன் பொருட்கள் கட்!!

0

ஒரு இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக உள்ள, ரேஷன் அட்டைஎதிர்பாராதவிதமாக தொலைந்து விட்டால், ரேஷன் அட்டைதாரர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் கார்டு:

நாடு முழுவதும் ரேஷன் கார்டு மூலம் ரேஷன் பொருட்களை பொதுமக்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த அட்டை தொலைந்து விட்டால், ரேஷன் பொருட்கள் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படும். இந்நிலையில் இப்பிரச்னையை கருத்தில் கொண்டு, உணவுத்துறை புதிய வசதியை துவக்கி உள்ளது. இந்த வசதியின் கீழ், தொலைந்து போன ரேஷன் கார்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆஃப்லைன் முறை மூலமாகவும் பெற்று கொள்ளலாம். தொலைந்து போன ரேஷன் கார்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். முதலில் அதிகாரப்பூர்வ வலைதள பக்கமான https://www.tnpds.gov.in/ பக்கத்துக்கு செல்ல வேண்டும்.

அதில், பயனாளர் நுழைவு என்னும் டேப்பை கிளிக் செய்ய வேண்டும். அதன் உள்ளே சென்றதும் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும் . அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-யை உள்ளிடவும்.தற்போது ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்யும் டேப் ஐ காணமுடியும். அதன் உள்ளே சென்று ‘ ஸ்மார்ட் கார்டு பிரிண்ட்’ என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின் உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் “சேவ்” என கொடுத்தால் பிடிஎஃப் வடிவில் உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் ஆஃப்லைன் முறையில் ரேஷன் அட்டையை பெறுவதற்கு முதலில் மாவட்ட உணவு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். இதையடுத்து குடும்ப உறுப்பினர்களின் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை சமர்ப்பிக்கவும்.அதில் ரேஷன் கார்டு எண், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் கார்டை, குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் அடையாளச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக நகல் ரேஷன் கார்டு பெறுவதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்த பின் அத்துடன் அபராதக் கட்டணத்தின் இரண்டு ரசீதுகளையும் இணைத்து சமர்ப்பிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here