ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் – தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்!!

0
ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் - தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்!!
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ரேஷன் ஊழியர்கள் ஸ்டிரைக் - பொதுமக்கள் அவதி! அரசு எடுத்த முடிவு!!

தமிழகத்தில், கைரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு மாற்று ஏற்பாடாக கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

 அமைச்சர் அறிவிப்பு :

தமிழகத்தில், உணவு வழங்கல் துறை வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கைரேகை சரிபார்ப்பு மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சில நேரங்களில் குளறுபடி ஏற்படுவதால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதற்கு மாற்று வழியாக, கண் கருவிழி மூலம் சரிபார்க்கப்பட்டு ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை சாத்தியமானால், இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். அதுபோல மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள், அவர்களுக்கு பதிலாக வேறு யாரையாவது ரேஷன் பொருட்களை பெற பரிந்துரை செய்தால், அதற்கென்று விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்தால் அவர்கள் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பயனாளர்கள் வரவேற்றுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here