தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.,  கைரேகை பதிவு குறித்து வெளியான தகவல்., என்னனு தெரிஞ்சுக்கோங்க!!!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.,  கைரேகை பதிவு குறித்து வெளியான தகவல்., என்னனு தெரிஞ்சுக்கோங்க!!!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் மாநில அரசு பல சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. இதுபோக பண்டிகை நாட்களில் மக்களை குஷிப்படுத்தும் வகையில் பல பரிசு தொகுப்புகளையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் உறுப்பினர்களும் கைரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர். அப்படி கைரேகையை பதிவு செய்யாவிட்டால் அவர்களின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
ஆனால் சமீபத்தில் குடும்ப உறுப்பினர்கள் கைரேகையை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கப்படாது என தெரிவித்தனர். தற்போது இதைத்தொடர்ந்து மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அதாவது குடும்ப அட்டைதாரர்களின் வசதி படி நியாய விலை கடைகளில் தங்களது கைரேகையை எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். மேலும் கடை ஊழியர்கள் குடும்ப உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி கடைக்கு வரவழைத்து கைரேகையை பதிவு செய்யக்கூடாது என்றும், மேலும் இந்த கைரேகையை பதிவு செய்வதற்கு எந்த ஒரு ஆவணமும் கேட்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here