துப்பாக்கியால் சுட்ட இலங்கை கடற்படையினர்…, பதறிப்போன தமிழக மீனவர்கள்!!

0
துப்பாக்கியால் சுட்ட இலங்கை கடற்படையினர்..., பதறிப்போன தமிழக மீனவர்கள்!!
துப்பாக்கியால் சுட்ட இலங்கை கடற்படையினர்..., பதறிப்போன தமிழக மீனவர்கள்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை காரணமாக, தமிழகத்தின் வங்கக்கடல் உள்ளிட்ட சில பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என கடந்த வாரத்தில் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை செப்டம்பர் 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் அரசிடம் அனுமதி பெற்று மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மிரட்டி உள்ளனர். இதையடுத்து, பதறிப்போன தமிழக மீனவர்கள் அதிவிரைவாக கரைக்கு திரும்பி உள்ளனர். இதனால், தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் சுமார் ரூ. 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காணுமாறு மீனவர்கள் மத்திய மற்றும் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகளிர் உரிமை தொகை பெறுவதில் சிக்கலா?? தீர்வு காண தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடு இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here