தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 6 முதல் 10ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 1 மாணவர்களுக்கு காலை 9.30 முதல் மதியம் 12 45 மணி வரைக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மதியம் 1:15 முதல் மாலை 4:30 மணி வரைக்கும் தேர்வுகள் நடக்க உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் தேர்வுக்கு முந்தைய நாள் தான் அதற்கான வினாத்தாள்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எமிஸ் தளம் வழியாக பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் 14417 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
வாகன ஓட்டிகளே உஷார்.., இனி இந்த வாகனங்களுக்கு அனுமதி கிடையாதா?? வெளியான அறிவிப்பு!!!