பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்., இதெல்லாம் செய்யக்கூடாது! அரசு கொடுத்த அதிரடி வார்னிங்!!

0
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்., இதெல்லாம் செய்யக்கூடாது! அரசு கொடுத்த அதிரடி வார்னிங்!!
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்., இதெல்லாம் செய்யக்கூடாது! அரசு கொடுத்த அதிரடி வார்னிங்!!

தமிழகத்தில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை முதல்வர் தொடங்கி வைக்க உள்ள நிலையில், மக்களுக்கு இதை விநியோகம் செய்வது குறித்த முக்கிய வழிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளது.

முக்கிய வழிமுறைகள்:

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்கத்துடன், பொங்கல் சாமான்களும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் நேற்றோடு நிறைவடைந்த நிலையில், இன்று இந்த நிகழ்வை முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு பயனர்களுக்கு இந்த பொருட்கள் ரேஷன் கடையில் வழங்கப்படும். தற்போது, இது குறித்த முக்கிய அறிவுரைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது வரும் ஜனவரி 12க்குள் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பை விநியோகம் செய்து முடிக்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட இயலாதோர் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 6 அடி அல்லது அதற்கு மேல் உள்ள கரும்பை மட்டுமே தர வேண்டும் எனவும், இரண்டு 500 ரூபாய் தாள்களை மட்டுமே பயனர்களுக்கு தரவேண்டும் சில்லறை மாற்றி தர கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டோக்கனில் குறிப்பிட்ட நாட்களை கடந்து வருவோருக்கு பரிசு தொகுப்பு வழங்க மறுக்கக்கூடாது எனவும், 100% பொங்கல் சாமான்களின் தரத்தில் எவ்வித குறைபாடும் இருக்கக்கூடாது எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here