இனி ஒவ்வொரு பொங்கல் பண்டிகையிலும் இது கட்டாயம் இடம்பெறும் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!!

0

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளில் ஆண்டுதோறும் சென்னையில் பிரமாண்ட கலை விழாவாக நடத்தப்படும் என கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று (04 செப்டம்பர் 2021) முதல் காலை சுற்றுலா துறை, கலை மற்றும் பண்பாட்டு துறை, இந்துசமய அறநிலையத்துறை மீதான விவாதங்கள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்நிலையில் அந்தந்த துறை அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.

அப்போது கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில்  சென்னையில் பிரம்மாண்ட கலை விழா நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த விழாவை நடத்துவதற்காக 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை அருங்காட்சியக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் அறிவியல் மையம் அமைக்கப்படும் எனவும், தொல்லியல் நிறுவனம் என்ற பெயர் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியவியல் நிறுவனம் என பெயர் மாற்றப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here