தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல் வடகிழக்கு பருவ மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இந்த பருவ மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திடீர் விடுமுறையும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் பொது மக்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.

அதாவது, வடகிழக்கு பருவ மழை காரணமாக அவசர உதவிக்கு காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. மேலும், ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைத்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக, மணிமுத்தாறு, கோவை, புதூர், பழனி மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் தலா 3 பேரிடர் மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.