தமிழகத்தில் உள்ள 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் தற்போது பொதுத் தேர்வுக்கான அட்டவணை எதிர்நோக்கி உள்ளனர். இதற்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை கணக்கிட்டே பொதுத் தேர்வுக்கான அட்டவணை உறுதி செய்ய முடியும். பெரும்பாலும், தீபாவளி பண்டிகைக்கு பிறகு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான இறுதி பட்டியலை தயார் செய்யும் பணியில் பள்ளி ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசானது அனைத்து பள்ளிக் கல்வித் துறைக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத பிளஸ் 2 மாணவர்களின் பெயரை பொது தேர்வுக்கான பட்டியலில் இருந்து நீக்க கூடாது. ஒரு வேளை நீக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் முதன்மை கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.