
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலாண்டு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கி உள்ளனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறையானது அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு பணி இடமாறுதல் பெற பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணி இடமாற விரும்பினால் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் “எமிஸ்” இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்படும் ஆசிரியர்களில் தகுதியானவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி தேவையுள்ள பள்ளிகளில் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் ரூ.1,000 உரிமை தொகை: பெண் விடுதலைக்கான முதல் விதை., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!